“அதிமுகவில் இருந்து விலகி இருக்க முடியவில்லை” – சலசலப்பை ஏற்படுத்திய போஸ்டர்

“அதிமுகவில் இருந்து விலகி இருக்க முடியவில்லை” என்ற வாசகங்களுடன் அன்வர் ராஜா ஒட்டியுள்ள போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுகவில் இருந்து அண்மையில்…

அதிமுகவில் இருந்து விலகி இருக்க முடியவில்லை” என்ற வாசகங்களுடன் அன்வர் ராஜா ஒட்டியுள்ள போஸ்டர்கள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.

மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அன்வர்ராஜா பெயரில் ராமநாதபுரம் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டர்களில், தலைவா… கட்சியில் இருந்து விலகி இருக்க முடியவில்லை என்றும், தாம் தினமும் உன்னை நினைக்கிறேன் என்றும், அதில் நான் என்னை மறக்கிறேன் எனவும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்வர் ராஜா, தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பெயரை உச்சரிக்காமல் யாராலும் அரசியல் நடத்த முடியாது எனக் கூறினார். அவருடன் உறவாடிய தருணத்தை நினைத்து வாழ்வதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.