முதல் பருவ பொதுத்தேர்வில் வினாத்தாளை முன்கூட்டியே சில பள்ளிகள் வழங்கியுள்ளதால் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ பள்ளிகள் மேலாண்மை கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு சிபிஎஸ்இ பள்ளிகள் கூட்டமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ பொதுத்தேர்வு கடந்த மாத இறுதியில் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தேர்வு மையங்களாக செயல்படும் சில CBSE பள்ளிகளில், தேர்வுக்கு முன்னரே வாட்ஸ் அப், இணையதளம், மின்னஞ்சல் வாயிலாக மாணவர்களுக்கு வினாத்தாள் விநியோகிக்கப்பட்டதாகவும், OMR தாளில் விடைகள் தெரியாவிட்டால், ஏதேனும் ஒரு காலி கட்டத்தில் தற்காலிகமாக அடையாளப்படுத்துமாறும், தேர்வுக்கு பிந்தைய மதிப்பீட்டின்போது மாணவர்களின் OMR தாளில் ஆசிரியர்களே விடைகளை நிரப்பியதாகவும் புகார் தெரிவித்துள்ளது.
பெரும்பாலான ஆசிரியர்களே தேர்வறை கண்காணிப்பாளராக இருந்ததால், அந்தந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. முறைகேடான வழியில், சமமற்ற சமுதாயம் உருவாவதைத் தடுக்க, முதல் பருவ பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.