மகத்தானது மனிதசேவை….. போர்க்களத்தை விட்டு மீட்புப் பணிக்குச் சென்ற உக்ரைன் வீரர்கள்…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கடந்த 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து…

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக உக்ரைன் போர் வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 6-ம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. அதைத் தொடர்ந்து 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்த நாளும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாயின.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,000ஐ கடந்துள்ளது. 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துருக்கியில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளது. சிரியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

அண்மைச் செய்தி: 500 கோல்கள் அடித்து புதிய சாதனை படைத்த ரொனால்டோ

பல்வேறு நாடுகள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவும் வகையில் தங்கள் நாட்டு மீட்பு படையினரை அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், உக்ரைனில் போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலில் அந்நாட்டு வீரர்களும் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிக்காக துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 88 உக்ரைன் போர் வீரர்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக உக்ரைன் நாட்டின் செய்தித் தொடர்பாளர் கோருன்ஷி கூறுகையில், எங்கள் நாட்டில் போர்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், துருக்கி மற்றும் சிரியாவுக்கு எங்களின் உதவி தற்போது தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.