முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள் சட்டம்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நாளை பதவியேற்பு

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள யு.யு.லலித் அலுவல் பணி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நாளை புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கிறார்.

 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் யு.யு.லலித்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. மேலும் அவருடைய அலுவல் பணிகள் நேற்றுடன் முடித்து வைக்கப்பட்டன. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பெயர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது. இதனால் அவர் புதிய தலைமை நீதிபதியாக நாளை பதவியேற்கிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புதிதாக பொறுப்பேற்கும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் மூத்த நீதிபதி சந்திரசூட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க தடை விதிக்க கோரி முர்சலின் அசிஜித் சேக் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த சில உத்தரவுகள் முரண்பாடுகளை கொண்டுள்ளன, எனவே, அவர் 50வது தலைமை நீதிபதியாக பதவியேற்க தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, அடிப்படை ஆதாரமின்றி மனு தாக்கல் செய்துள்ளதாக கூறி தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“பினராயி முதலமைச்சராக இருக்கும் காலத்திலேயே பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்“ – தமிழக அமைச்சர்

Halley Karthik

சேலம் அதிமுக ஒன்றிய செயலாளர் போர்க்கொடி

EZHILARASAN D

ஜி.எஸ்.டி. கடந்து வந்த பாதை!

G SaravanaKumar