பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு சிறப்பு ரயில்கள்…!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூர் – திருச்சி, தாம்பரம் – கோவை ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெவ்வேறு ஊர்களில்…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெங்களூர் – திருச்சி, தாம்பரம் – கோவை ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெவ்வேறு ஊர்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். பண்டிகையை கொண்டாடும் பொருட்டு அவர்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

அதன்படி தாம்பரம் – தூத்துக்குடி, தாம்பரம் – திருநெல்வேலி ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று நேற்று தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்நிலையில் தாம்பரம் – கோவை, பெங்களூர் – திருச்சி ஆகிய இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜனவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 10.45 மணிக்கும், மறுமார்க்கமாக ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு காலை 07.30 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இதையும் படியுங்கள் : “அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும்” – ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!

அதேபோல், ஜனவரி 12-ம் தேதி மதியம் 02..30 மணிக்கு பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு, மறுமார்க்கமாக ஜனவரி 13-ம் தேதி அதிகாலை 04.45 மணிக்கு திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.