வேட்புமனு தாக்கல் செய்வதற்கான நேரம் என்ன……? – தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம்………!

பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அத்ன் படி வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறும் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று அறிவித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழ்நாட்டில் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். எந்த வாக்குச்சாவடியில் தங்கள் வாக்கு இருக்கிறது என்பதை மக்கள் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். வாக்குச்சாவடி விவரங்கள் தொடர்பாக ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

வாக்குச்சாவடிகளில் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க பெட்டக வசதி செய்து தரப்படும். விடுமுறை நாள் தவிர அனைத்து நாள்களிலும் வேட்புமனு பெறப்படும்.

மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்யலாம். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

தேர்தலை முன்னிட்டு 2,106 பறக்கும் படைகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சோதனைகளின்போது பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிட்டுள்ளோம்.

ஒரே நாளில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெரிய அளவிலான டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படும்.

மார்ச் 26ஆம் தேதி வரை புதிய வாக்காளர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

அரசியல் கட்சியினர் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம். தேர்தல் பிரசார அனுமதியை தேர்தல் ஆணைய இணையதளம் மூலமே பெற வேண்டும்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.