இந்தியாவில் மேலும் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒரே நாளில் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில், இரவு ஊரடங்கை அமல்படுத்துவது, கல்விக்கூடங்களை மூடுவது, பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளில் ஈடுபடுவது என தொற்று பாதிப்பை குறைக்க, மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோவோவாக்ஸ் மற்றும் கோர்பேவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதில், கோர்பேவேக்ஸ் தடுப்பூசி ஐதராபாத்தை சேர்ந்த பயலாஜிகல்-இ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கோவிஷீல்ட், கோவாக்சினை அடுத்து இந்தியாவில் தயாராகும் 3வது தடுப்பூசி இது ஆகும். மேலும், வைரஸ் எதிர்ப்பு மருந்தான மால்னுபிரவிர் மருந்துக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மால்னுபிரவிர் மருந்து பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.