தேசிய தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் தினசரி கொரோனா பாதிப்பு 70% மற்றும் 50% அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. மட்டுமல்லாது ஒமிக்ரான் தொற்றும் புதிய அச்சுறுத்தலை உருவாக்கி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 496 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது 50% அதிகமான எண்ணிக்கையாகும்.
கடந்த ஜூன் மாதத்திற்கு பின்னர் டெல்லி இந்த அதிகபட்ச எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. அதேபோல தினசரி பாதிப்பு விகிதம், கடந்த மே மாதத்திற்கு பின்னர் இன்று 0.89% ஆக பதிவாகியுள்ளது. நேற்று, 331 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் பதிவான எண்ணிக்கையைவிட அதிகமாகும். இதில் 142 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா இரண்டாம் அலையின்போது அதாவது கடந்த மார்ச்-ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட தொற்று பாதிப்பை காட்டிலும் தற்போது தொற்று பாதிப்பு 21% வேகமாக பரவி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் 59லிருந்து 199ஆக இந்த பாதிப்பு அதிகரித்துள்ளது.
பொதுமக்கள் அதிகளவில் கூடுவது பெரிதும் கவலையளிக்கின்றது. எனவே கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். டெல்லியில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி, கல்லூரிகள் இதர கல்வி நிறுவனங்கள், சினிமா அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் ஒற்றைப்படை-இரட்டை அடிப்படையில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையை பொறுத்த அளவில், 70% தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,377 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.








