பல்லடம் அருகே நொச்சிபாளையம் தனியாா் பனியன் நிறுவனத்தில் திருடிய வழக்கில், 2 பேரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பல்லடம் அருகே நொச்சிபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக பனியன் மற்றும் பனியன் தைக்க பயன்படும் துணிகள் அடிக்கடி திருட்டு போனது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் பனியன் நிறுவனத்தில் புதிதாக தைத்து அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த 50 பனியன்கள் கொண்ட பண்டல் ஒன்று திருட்டு போனது. இதையடுத்து பனியன் கம்பெனி நிர்வாகிகள் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதே நிறுவனத்தில் வேலை செய்யும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ரத்னகுமார் மற்றும் தினேஷ்குமார் ஆகிய இருவர் பனியன்களை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட இருவர் மீதும் பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ரூபி.காமராஜ்







