திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்.!

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய் முதல் நாளே பெரம்பூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் மற்றொரு தொகுதியான திருச்சி கிழக்கில் தவெக தலைவர் விஜய் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்பு மனு தாக்கலை தொடர்ந்து அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் உள்ள மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.