துருக்கி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபடுகளுக்குள் சிக்கி 21 நாட்களாக உயிருக்கு போராடிய குதிரை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6-ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியது. தொடர்ந்து அதே நாளில் 7.5 ரிக்டர் அளவிலும், பின்னர் இரவில் 6 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இவ்வாறு, அடுத்தடுத்த ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாயின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கானோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து மீட்புக் குழுவினர், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : பார்டர் கவாஸ்கர் கோப்பை; இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இந்நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 21 நாட்களாக உயிருக்கு போராடி வந்த குதிரை ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. அடியமன் நகரில், கட்டட இடிபாடுகளை நீக்கும் பணி நடைபெற்றது. அப்போது இடிபாடுகளுக்குள் குதிரை ஒன்று உயிருடன் இருப்பதை கண்ட மீட்புக்குழுவினர், அதனை பத்திரமாக மீட்டனர்.
இது தொடர்பான வீடியோவை அந்நாட்டு உள்துறை அமைச்சரின் ஆலோசகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.