முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

பார்டர் கவாஸ்கர் கோப்பை; இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த வகையில் கடந்த பிப்.9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதனை அடுத்து கடந்த பிப்.17ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

இதையும் படியுங்கள் : தமிழில் பெயர் பலகை: அபராதம் போதுமானதல்ல – உயர்நீதிமன்ற மதுரை கிளை

இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்குகிறது.

முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதே சமயம், மூன்றாவது டெஸ்ட் போட்டியை வென்று இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வெட்டுகளையும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் -சீமான்

EZHILARASAN D

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

Web Editor

விளம்பரத்துக்காக வழக்கு தொடுப்பதா? பிரபல நடிகைக்கு நீதிமன்றம் ரூ.20 லட்சம் அபராதம்!

Halley Karthik