முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த், இசையமைச்சாளர் இளையராஜா உள்ளிட்ட திரைப்பலங்களும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னையில் இன்று திமுக சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாள் விழாவையொட்டி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நடவடிக்கையாக திமுக சார்பில் இன்று பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்துவார் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.







