முக்கியச் செய்திகள் தமிழகம்

டி.டி.வி. தினகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளராக இருப்பவர் டி.டி.வி. தினகரன். இவர் கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாக தஞ்சாவூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் முதலே மிகவும் சோர்வாக காணப்பட்டதாக தெரிகிறது. இந்தநிலையில் அவர் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அவரது கட்சி நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உணவு உட்கொண்டதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள், அவர் உடல்நலனுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்பி விடுவார் என தெரிவித்தனர்.

இராமானுஜம்.கி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கமல்!

Niruban Chakkaaravarthi

”கலைஞர் என்னை இயக்குகிறார்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Arivazhagan Chinnasamy

சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

Halley Karthik