முக்கியச் செய்திகள் சினிமா

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் ‘பம்பா பாக்யா’ காலமானார்

சர்வம் தாளமயம், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி போன்ற பல படங்களில் பல பாடல்களைப் பம்பா பாக்யா பாடியுள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் 2.0 திரைப்படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த பாடலை பாடியவர் பம்பா பாக்யா. அந்த பாடல் மூலம் இவரது குரல் உலகம் முழுவதும் பிரபலமானது. அதே போல சர்க்கார் படத்தில் இடம்பெற்ற சிமிட்டங்காரன், பிகில் படத்தில் காலமே காலமே, சர்வம் தாளமயம், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னி நதி போன்ற பல படங்களில் பல பாடல்களைப் பம்பா பாக்யா பாடியுள்ளார்.இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் பம்பா பாக்யா. நேற்று திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. மாரடைப்பு காரணமாக அவர் காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பாடியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. 49 வயதாகும் இவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழி உட்படப் பல பாடல்களைப் பாடியுள்ளார்.மிகவும் தனித்துவமான தன் குறளால் மக்களின் கவனத்தை ஈர்த்த பம்பா பாக்யா அக்டோபர் 31 ஆம் தேதி 1972ல் சென்னையில் பிறந்தார். ஆரம்பக் காலங்களில் திருமண கச்சேரிகளில் பாடல் பாடிவந்த இவர் பின் தமிழ்த் திரையுலகில் மிக முக்கிய பாடால்களை பாடியுள்ளார்.உலகப் புகழ்பெற்ற பம்பா எனும் இசைக்கலைஞரைப்போல் இவரின் இசை ஞானம் இருப்பதால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானே இவருக்குப் பம்பா எனப் பெயர் வைத்தார். பாம்பா பாக்யா வரும் ஆண்டுகளில் பல படங்களில் பாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இவரின் மறைவு அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடகர் பம்பா பாக்யா மறைவுக்குத் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சொத்துத் தகராறு: மாறி மாறி தாக்கிக்கொண்ட உறவினர்கள்

Gayathri Venkatesan

’பாஜக விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்கிறோம்’ – அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்

G SaravanaKumar

குடியரசுத் தலைவர் தேர்தல் – காங்கிரஸ் ஆதரவுபெற்ற வேட்பாளரா சரத் பவார்?

Mohan Dass