ஆண்டிபட்டி தொகுதியில் பிறகட்சியில் ஒப்பந்ததாரர்கள், பினாமிகள் தான் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி.வி.தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பிறக்கட்சிகள் தேர்தலுக்காக, ஓட்டுக்கு 2 ஆயிரம், 5 ஆயிரம் என்று கொடுக்கும் பணம், மக்களின் வரிப்பணம் தான் என்றும், எனவே மக்களுக்கு உண்மையாக இருக்கும், அமமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென்றும், டிடி.வி.தினகரன் குறிப்பிட்டார். மேலும், பரப்புரையின் போது, அவருக்கு பல்வேறு இடங்களில், அமமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.







