ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர்!

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கடலாடி, ஏர்வாடி, வாலிநோக்கம், இதம்பாடல், முந்தல், மாரியூர் ஆகிய பகுதிகளைச்…

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்குட்பட்ட கடலாடி, ஏர்வாடி, வாலிநோக்கம், இதம்பாடல், முந்தல், மாரியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ரஜினி மன்றத்தினர் 150க்கும் மேற்பட்டோர் முதுகுளத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

மேலும், முதுகுளத்தூர் தொகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து இதுவரை 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த இணைப்பு திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை உருவாக்கி தரும் என வேட்பாளர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.