பெரிச்சாளிகளை விரட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு பேய்களை உள்ளே விட்டுவிடக் கூடாது என அதிமுக, திமுகவுக்கு எதிராக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் திருப்பூர் தெற்கு தொகுதி விசாலாட்சி , பல்லடம் தொகுதி ஜோதிமணி , காங்கேயம் தொகுதி ரமேஷ் மற்றும் அவிநாசி தொகுதி மீரா , திருப்பூர் வடக்கு தொகுதி செல்வக்குமார் ஆகியோரை ஆதரித்து நேற்று டிடிவி தினகரன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், தொண்டர்களையும் மக்களையும் நம்பாமல் காந்தி தாத்தா படம் போட்ட பணத்தையே ஆளும் கட்சியினர் நம்பியிருப்பதாகக் கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆறு குளங்களை தூர்வாருவது போல கஜானாவையும் தூர்வாரிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் பேசிய அவர் ” நாம் பெரிச்சாளிகளை விரட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு பேய்களை உள்ளே விட்டுக்விட கூடாது’ என்று அவர் கூறினார்.







