தமிழகத்தின் பிள்ளைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான நேரம் வந்து விட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உறுதிபடத் தெரிவித்தார்.
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர் திவ்யபாரதியை ஆதரித்து ஆடுதுறையில் அவர் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், மாற்றத்திற்கான எளிய முறை மக்கள் புரட்சி எனும் முழக்கத்தை முன்வைத்து பரப்புரையில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டினார். ஆணுக்கு பெண் சமம் என்பதை உணர்த்தும் வகையில் சம அளவில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பத்தையும் அவர் குறிப்பிட்டார்.
தான் கேட்பது மக்களின் வாக்கை அல்ல என்றும் நம் பிள்ளைகளின் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு வாய்ப்பையே கேட்பதாகவும் சீமான் குறிப்பிட்டார்.







