பாலாற்றின் குறுக்கே ஐந்து கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உறுதிபடத் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மகேஷ், உத்தரமேரூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சோமசுந்தரம் ஆகியோரை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர், நெசவாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் போலி பட்டு கூட்டுறவு சங்கங்களை கண்டறிந்து கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார் காஞ்சிபுரத்தை மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கல்வி மற்றும் மருத்துவம், மருத்துவ மேற்படிப்பு இலவசம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருப்பதையும் ராமதாஸ் சுட்டிக்காட்டினார்.







