“மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை”: டிடிவி தினகரன்

ஏழை எளிய மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் பெருமிதம் தெரிவித்தார். திருச்செந்தூர் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் எஸ்.வடமலைபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்செந்தூரில்…

ஏழை எளிய மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் பெருமிதம் தெரிவித்தார்.

திருச்செந்தூர் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் எஸ்.வடமலைபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் திருச்செந்தூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திறந்த வேனில் நின்றபடி பேசிய அவர், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் எல்லா திட்டங்களும் கிடைக்கும் என முதல்வரும், துணை முதல்வரும் சொல்வதை சுட்டிக்காட்டினார்.

தமிழக மக்கள் விரும்பாத நீட் தேர்வை அவர்கள் அனுமதித்திருப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். ஜெயலலிதா இருக்கும் வரை நீட் தேர்வை அவர் நுழையவிடவில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழகத்தில் உயர் பெண் போலீஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை என்றும் டிடிவி தினகரன் வருத்தம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.