இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டி 20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியில் தொடக்க ஆட்ட காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர். ஸ்மிருதி மந்தனா 48 பந்துகளில் 80 ரன்கள் குவித் நிலையில் மால்ஷா ஷெஹானி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதே போல ஷஃபாலி வர்மாவும், 46 பந்துகளுக்கு 76 ரன்கள் எடுத்திருந்த போது நிமாஷா மீபேஜ் பந்தில் அவௌட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷும் தனது அதிரடி ஆட்டத்தால் 16 பந்துகளுக்கு 40 ரன்கள் குவித்தார். இதனால் அணியின் ஸ்கோர் கணிசமான அளவு உயர்ந்தது.
இலங்கை அணி சார்பில் நிமாஷா மீபேஜ், மால்ஷா ஷெஹானி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதனை தொடர்ந்து இலங்கை அணி 222 ரன்கள் வீழ்த்தினார் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்டி களமிறங்க உள்ளது.







