“உண்மையாக காதலித்தால் பச்சைக் குத்திக்கொள்”; காதலியை நச்சரித்தவர் கைது

காதலிப்பதை நிரூபிக்கச் சொல்லி இளம்பெண்ணை நச்சரித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அபினேஷ் ( வயது 28). பூக்கடை நடத்தி வரும் இவர், அந்த பகுதியில் செயல்பட்டு…

காதலிப்பதை நிரூபிக்கச் சொல்லி இளம்பெண்ணை நச்சரித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் அபினேஷ் ( வயது 28). பூக்கடை நடத்தி வரும் இவர், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் செவிலியர் கல்லூரியில் படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் தங்கள் காதலை பல இடங்களுக்கு சென்று வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் அபினேஷுக்கு அந்த பெண் உண்மையாக காதலிக்கிறாரா என்ற சந்தேகம் ஒரு கட்டத்தில் ஏற்பட்டுள்ளது. காதலியிடம், “என்னை விட்டு செல்லமாட்டாயல்லவா நீ?  உண்மையில் என்னை காதலிப்பதாக இருந்தால் என் பெயரை பச்சை குத்தி கொள்ள வேண்டும்” என வற்புறுத்தியுள்ளார்.

முதலில் காமெடி செய்வதாக நினைத்த காதலி அவர் தொடர்ந்து இது குறித்து பேசி நச்சரிக்கவே, “உன்னை காதலிப்பது உண்மை” என பல வடிவங்களில் கூறியுள்ளார். ஆனால், சமாதானமடையாத அபினேஷ்,  மீண்டும் மீண்டும் பச்சை குத்தி கொள்ள கட்டாயப்படுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் வெறுத்துப் போன அப்பெண், இந்த சம்பவத்தை தன் தந்தையிடம் கூறினார். மேலும், இது சம்பந்தமாக தந்தையுடன் சேர்ந்து மார்தாண்டம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்  பேரில் போலீசார் அபினேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.