திருநங்கையாக மாறிய மகன்: ஆட்களை வைத்து கொலை செய்த தாய்

சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த உமாதேவி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது…

சேலத்தில் திருநங்கையாக மாறிய மகனை ஆட்களை வைத்து தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த உமாதேவி, கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது மகன் நவீன்குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள ஒரு முட்புதரில் கடந்த வாரம் காயங்களுடன் மீட்கப்பட்ட நவீன்குமார், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில் திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்தன.

மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காததால் அவருக்கு ஹார்மோன் ஊசி போட்டு ஆணாகவே மாற்ற தாய் உமாதேவி முயன்றுள்ளார். இதற்காக நவீன்குமாரை சில ஆட்களை வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார்.

அப்போது நவீன்குமார் முரண்டு பிடித்த நிலையில் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நவீன்குமார் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து தாய் உமாதேவி உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.