ஓபிசி பட்டியலில் திருநங்கைகள் – மத்திய அரசு முடிவு

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  திருநங்கைகளை சமூகத்தில் சம அந்தஸ்தில் மதிக்கப்படும் அளவுக்கு அவர்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம்…

திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

திருநங்கைகளை சமூகத்தில் சம அந்தஸ்தில் மதிக்கப்படும் அளவுக்கு அவர்களின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பினை வழங்கியது.  இதையடுத்து மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு திருநங்கை பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவந்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து 6 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 2020ம் ஆண்டு திருநங்கைககளை ஓ.பி.சி பிரிவில் சேர்ப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசித்தது.

ஆனால், இதுதொடர்பாக மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது அவற்றுக்கான பரிந்துரையை மத்திய அமைச்சரவை குழுவுக்கு மத்திய சமூக நீதித்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஓ.பி.சி பிரிவில் உள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் திருநங்கைகளுக்கும் அரசு பணி மற்றும் இதர ஒதுக்கீடு-களில் இடங்கள் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.