பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு; தமிழ்நாடு முதலிடம் – உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார். விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள அரசு சட்டக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ்…

இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கான 30 சதவிகித இட ஒதுக்கீடு முழுமையாக கிடைப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் சாலாமேட்டிலுள்ள அரசு சட்டக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் தலைமமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், சமுதாய மாற்றத்தை பொறுத்து நீதித்துறையில் வழக்கின் தன்மையும் மாறும் என தெரிவித்தார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அரசுப் பணிகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு பெண்களுக்கு முழுமையாக கிடைப்பதாகவும், மற்ற மாநிலங்களை காட்டிலும் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.