இல்லம் தேடிக் கல்வி; நெறிமுறை மீறிய கலைபயணக்குழு மீது அதிரடி நடவடிக்கை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி பயணக் குழுவில் உள்ள ஒருவர், நெறிமுறை மீறியதால் கலைபயணக்குழு மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக்…

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி பயணக் குழுவில் உள்ள ஒருவர், நெறிமுறை மீறியதால் கலைபயணக்குழு மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்காக 8 விழிப்புணர்வு பிரச்சாரக் குழு ஈடுபட்டுவந்தது. சர்மிளா சங்கர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வந்த குழுவில் ஒருவர், இல்லம் தேடிக் கல்வி டி-சர்ட் உடன் மதுபானக் கடையில் மதுபானம் வாங்கிகொண்டு, இல்லம் தேடிக் கல்வி பயண வாகனத்தில் ஏறும் வீடியோ காட்சி அங்குள்ள சமூக ஆர்வலர்களால் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, கலைக்குழுக்களுக்கான நெறிமுறைகளை மீறி நடந்து கொண்டதால், அக்குழு மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சர்மிளா சங்கர் தலைமையிலான கலைப் பணிக் குழுவை முழுமையாக விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இருந்து நீக்கப்படுவதாக திருச்சிராப்பள்ளி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.