பொதுமக்களுக்குச் சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதை அடுத்து குடியாத்தம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனை அந்தஸ்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ சேவை வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர். கண் மருத்துவம், பல் மருத்துவம், மகப்பேறு, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு என பல்வேறு பிரிவுகளில் சிறப்பு கவனம் செலுத்தி இந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் பாராட்டைப் பெற்றுள்ளனர். மேலும், அறுவை அரங்கம், இரத்த வங்கி, ரத்தப்பரிசோதனை மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியாத்தம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனை அந்தஸ்துக்கு அரசால் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.








