காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்கக்கோரி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள், லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறு காரணமாக காணாமல் போனதையடுத்து, அவர்களை மத்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடந்த 16-ஆம் தேதியன்று கடிதம் எழுதியிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று நேரில் சந்தித்து, தமிழக மீனவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். அதற்கான கடிதத்தையும் அவர் அளித்தார்.
தமிழக மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்துள்ளார்.