முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆளுநரை தொடுவதும், பிரதமர் மோடியை தொடுவதும் ஒன்னு தான்; எச்.ராஜா எச்சரிக்கை

ஆளுநரை தொடுவதும், பிரதமர் மோடியை தொடுவதும் ஒன்னு தான், ஆளுநரை பற்றி பேசக்கூடாது என ஹெச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமம் அருகே சாத்தனூரில் இளையான்குடி தெற்கு ஒன்றிய பா.ஜ. சார்பில் நடைபெற்ற நம்ம ஊரு பொங்கல் விழாவைத் துவக்கி வைத்த பின்
பா.ஜ.க,மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும் போது, தி.மு.க.,ஆட்சி எல்லா துறைகளிலும் தோற்றுப் போன ஒரு ஆட்சி..ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் தி.மு.க.,விற்கு சரியான பாடம் புகட்டுவார்கள். தி.மு.க.,மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், கமலாலயத்தில் அதிமுக ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினர் தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.ஓரிரு நாட்களில் அதிமுக பாஜக நிலைப்பாடு குறித்து மாநில தலைவர் முடிவை அறிவிப்பார். அதிமுக பிரச்சனை நீதி மன்றத்தில் உள்ளது.அதற்கு நான் கருத்துச் சொல்ல முடியாது. அவர்களைப் பற்றிப் பேச திமுகவிற்கு என்ன அருகதை இருக்கிறது ஹெச்.ராஜா தெரிவித்தார்.

முன்னதாக தொண்டர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, தற்போதைய திமுக அரசாங்கம் நடுங்கிப் போய் உள்ளது. காரைக்குடியில் நடைபெற்ற ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடையில் அமர்ந்திருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் வாயைத் திறந்தாரா. இரண்டு மந்திரிகள் அமர்ந்திருந்தார்கள். ஆளுநர் ரவியை தொடுறதும்,பிரதமர் மோடியை தொடரதும் ஒன்று தான். ஹி இஸ் அவர் ரெப்ரசென்டேட்டிவ், இனிமேல் ஆளுநரைப் பற்றிப் பேசக்கூடாது, பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது என தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கர்நாடகாவில் கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரியூட்ட லஞ்சம் கேட்கும் அவலம்!

G SaravanaKumar

ஜாம்பவான்கள் சங்கமிக்கும் லெஜன்ட் லீக் கிரிக்கெட் போட்டி

EZHILARASAN D

சட்டப்பேரவையில் ஓபிஎஸ் அருகே அமர்வதை தவிர்த்த இபிஎஸ்

Web Editor