14 கிலோ தக்காளி ரூ.70க்கு கொள்முதல்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி!

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் தக்காளி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியால் 14 கிலோ கொண்ட பெட்டி விலை 70 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரின் பிரசித்தி பெற்ற  தக்காளி…

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் தக்காளி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியால் 14 கிலோ கொண்ட பெட்டி விலை 70 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரின் பிரசித்தி பெற்ற  தக்காளி சந்தையில், மாவட்டத்தில் விளைவிக்கக்கூடிய தக்காளி பழங்கள் அனைத்தும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டு, வெளிச்சந்தைகளுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இப்போது தக்காளியின் விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில், விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பதினான்கு கிலோ அடங்கிய தக்காளிப்பட்டியின் விலை 70 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், ஒரு கிலோ தக்காளியின் விலை ஐந்து ரூபாய் என நிர்ணயம் செய்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.
உரம், இடுபொருள், கலை மற்றும் செடிகள் பராமரிப்பு என கணக்கில்லாமல் செலவு செய்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த விலை முற்றிலுமாக கட்டுபடியாகவில்லை என்றும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். குறைந்தபட்சம் ஒரு கிலோ தக்காளியின் விலை 30 ரூபாய்க்காவது கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகள் தக்காளி சாகுபடியில் லாபம் ஈட்ட முடியும் மற்றும் இந்த விலை விவசாயிகளுக்கு கடும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.