நெல் கொள்முதல் நிலையத்தில் கட்டாய வசூல் என கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

உத்திரமேரூர் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டைக்கு 50 ரூபாய் என கட்டாய வசூல் செய்வதாகக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னாத்தூர் கிராமத்தில் இந்திய…

உத்திரமேரூர் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், மூட்டைக்கு 50 ரூபாய் என கட்டாய வசூல் செய்வதாகக் கூறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அன்னாத்தூர் கிராமத்தில் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு,(NCCF) சார்பில் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.

அங்கு, இடைத்தரகர்கள் மூலம் மூட்டை ஒன்றிற்கு கட்டாய பணமாக 50 ரூபாய் வசூல்
செய்து வருவதாக கூறப்படுகிறது. அதில், நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை செய்யும் கூலி தொழிலாளிக்கு 22 ரூபாய் மட்டும் கொடுப்பதாகவும், மீதமுள்ள 28 ரூபாய் அரசியல் கட்சியினருக்கு செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து விவசாயிகள், நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இதை அயடுத்து, ஏராளமான விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தை  முற்றுகையிட்டு மூட்டைக்கு 50 ரூபாய் பணம் வாங்காதே என கோஷமிட்டனர்.

—-ம. ஶ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.