மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் : ரூ.5 கோடிக்கு விற்பனை – நியூஸ்7 தமிழ் கேள்விக்கு RTI ல் தகவல்

மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு…

மதுரை மீனாட்சி அம்மனின் பட்டு சேலைகள் ஐந்து கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர்.  மேலும் மதுரை மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் தினமும் பொதுமக்கள் சார்பாகவும் கோவில் நிர்வாகம் சார்பாகவும் பட்டு சேலைகள், வேஷ்டிகள், துண்டுகள் சாத்தப்படுவது வழக்கம்.

அவ்வாறு சாத்தப்படும் கோவில் வேட்டி, சேலை, மற்றும் துண்டுகளை நிர்வாகம் சார்பாக வாரம் ஒரு முறை கோவில் வளாகத்தில் ஏலம் விடப்பட்டு விற்னை செய்யப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பட்டு சேலைகள் விற்பனை மூலம் கிடைத்துள்ள விவரம் குறித்து நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மருதுபாண்டி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி கேட்டிருந்தார். இந்த  கேள்விக்கு கோவில் நிர்வாகம் சார்பாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தகவல் உரிமை சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட தகவலில் கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் மூன்று ஆண்டுகளில் 5 கோடியே 45 லட்சத்து 64 ஆயிரத்து 586 ரூபாய்க்கு மதுரை மீனாட்சி அம்மனுக்கு சாத்தப்பட்ட பட்டுச் சேலைகள்  விற்பனையாகியுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலம் மூலம் கிடைத்த வருமானம் கோவிலின் வங்கி கணக்கில் இருப்பு வைக்கப்படும் எனவும்  கோவில் நிர்வாகம் சார்பாக  தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.