தமிழகத்தில் இன்று 6,162 பேர் கொரோனாவால் பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 6,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை…

தமிழ்நாட்டில் இன்று மட்டும் 6,162 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1,70,283 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்றைவிட குறைந்து 6,162 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9,046 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். மேலும் 155 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த கொரோனா நிலவரம்:

கொரோனா வைரஸால் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 24,49,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,67,831 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதைப்போல 31,901 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மொத்த பாதிப்பில் இதுவரை 14,32,433 ஆண்களும், 10,17,106 பெண்களும், 38 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொருத்தவரையில் இன்று மட்டும் 372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 5,30,789 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5,19,128 பேர் குணமடைந்துள்ளனர் மேலும் 8,131 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.