தமிழ்நாட்டில் புதிதாக 6,596 பேருக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில்,…

மிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. .

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள் ளப்பட்டது. இதில் 6 ஆயிரத்து 596 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 43 ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து 10 ஆயிரத்து 432 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 23 லட்சத்து 58 ஆயிரத்து 785 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில், 166 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 746 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையிலும் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் புதிதாக 396 பேர் கொரோனா வால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். 282 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோட்டில் 686 பேருக்கும் திருப்பூரில் 419 பேருக்கும் சேலத்தில் 472 பேருக்கும் கோவையில் 793 பேருக்கும் புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.