பயங்கரவாதிகள் பயன்படுத்தும் புதிய தொழில்நுட்பங்கள்: பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை கையாள்வதற்கான செயல் திட்டத்தை, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில்…

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் -இ -தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை கையாள்வதற்கான செயல் திட்டத்தை, இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் முன் மொழிந்தார்.

தஜிகிஸ்தான் நாட்டின் துஷன்பே (Dushanbe)வில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப்பும் கலந்துகொண்டனர். மற்றும்ஆப்கானிஸ்தான், ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் அஜித் தோவல், பயங்கரவாத பிரச்னையை எழுப்பினார். அவர் கூறும்போது, பயங்கரவாதத்தை நாங்கள் கண்டிக்கிறோம். பயங்கரவாதம் மூலம் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்துபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார். பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ட்ரோன் உள்ளிட்ட புதிய தொழில் நுட்பங்களையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர், எச்சரித்தார்.

பின்னர் அவர் ரஷ்ய பாதுகாப்பு ஆலோசகருடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.