தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கரூர் உட்பட 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தீபாவளியன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நேற்று தெரிவித்துள்ளார்.







