கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்…

குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில், கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மாவட்டங்களிலும் இன்றும் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, நாமக்கல், விழுப்புரம், பெரம்பலூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி ஆகிய 17 மாவட்டங்களிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.