இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10 சதவிகிதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்று நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் பேசும்போது இதைத் தெரிவித்தார். பிரதமர் மோடியின் ஏழு ஆண்டு கால அரசு, தொழில்கள் வளருவதற்கான வலிமையான பொருளாதார அடித்தளத்தை அமைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடமாக இந்தியாவின் பொருளாதாரம் தடுமாற்றத்தை சந்தித்தத நிலையில், பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 9.5 சதவிகிதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளதை அவர் குறிப்பிட்டார்.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவிகிதத்திற்கும் கூடுதலாக இருக்கும் என்றும் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் இந்த வளர்ச்சி 8 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்றும் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.