முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு: 475 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் 36 ஆயிரத்தைக் கடந்த இந்த தொற்று, சமீபகாலமாக குறைந்து வருகிறது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 518 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 33 ஆயிரத்து 764 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் இதுவரை 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 3 லட்சத்து 10 ஆயிரத்து 224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 29 ஆயிரத்து 717 பேர் குணமடைந்து கடந்த 24 மணி நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 16 லட்சத்து 13 ஆயிரத்து 221 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை, 21 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 3,561 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது. சென்னையில் கடந்த வாரத்தில் 7 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை, மெள்ள குறைந்து வருகிறது. ஒரே நாளில் சென்னையில் 98 பேர் சென்னையில் உயிரிழந்துள்ளனர். 5223 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

செங்கல்பட்டில் 1302 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 909 பேருக்கும் திருவள்ளூரில் 1181 பேருக்கும் திருச்சியில் 1775 பேருக்கும் கோவையில் 4268 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

Advertisement:

Related posts

ஆழ்கடலில் விபத்து: மீனவர்களை மீட்டுக் கொடுக்கவேண்டும் என விஜய் வசந்த் கோரிக்கை!

Ezhilarasan

இன்று முதல் தேநீர் கடைகளை திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி!

Vandhana

முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி திட்டம்: முதல்வர்!