முக்கியச் செய்திகள் தமிழகம்

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சி உத்தரவு!

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை, நாள்தோறும் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர, சென்னை மாநகராட்சி பல்வேறு புதிய நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை, நாள் தோறும் மின்னஞ்சல் மூலமாக அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதனை ஒருங்கிணைக்கவும் கண்காணிக்கவும் 15 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகவும் இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.நாள்தோறும் தகவலை அளிக்க மறுத்தாலோ அல்லது தவறான தகவலை அளித்தாலோ, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ஒரே நாளில் கொரோனாவால் 6,148 பேர் உயிரிழப்பு!

வைரமுத்து புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்: முதல்வர் புகழாரம்!

அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Saravana