தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு பெட்ரோல் டீசல் வரியை குறைத்து மக்களின் துன்பத்தை போக்கவேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட செயற்குழு கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது . இதில் அகில இந்திய மகளிர் அணியின் தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு செயற்குழு கூட்டத்தில் பேசினார்
அவர் கூறுகையில், மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்து வழங்குகிறது மாநில அரசுகள் மத்திய அரசை விட வரியை அதிகமாக விதித்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கிறது.
பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிகுள் கொண்டு வரவேண்டும் என்பதுதான் பிஜேபியின் நிலைப்பாடு ஜிஎஸ்டியில் கொண்டு வந்தால் வரி குறையும் மாநில அரசு வரி வருவாய்க்கும் ஜிஎஸ்டி கொடுக்கலாம்
இன்றைய சூழ்நிலையில் நிலைமை ஒரிசா போன்ற மாநிலங்களில் வரி குறைக்கப்பட்டு பெட்ரோல் டீசல் விலையை குறைத்து வழங்குகிறது. தமிழகத்தில் மக்களின் துன்பத்தை குறைக்க வேண்டும் என்றால் மற்ற மாநிலங்களைப் போல திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியதை நிறைவேற்றும் வகையில் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலையை குறைந்து வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.







