முக்கியச் செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன்: சானியா மிர்சா-போபண்ணா இணை தோல்வி!

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – போபண்ணா இணை தோல்வியடைந்து வெளியேறியது.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதன் கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-போபண்ணா இணை, ஆண்ட்ரே க்ளெபாக்-ஜேன் ஜூலியன் ரோஜர் இணையை எதிர்கொண்டது.

இதில் முதல் செட்டை சானியா மிர்சா-போபண்ணா இணை கைப்பற்ற, 2வது செட்டை க்ளெபாக்-ரோஜர் இணை வென்றது. இதனால், வெற்றியை நிர்ணயிக்கும் 3வது சுற்றில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த செட்டில், 11-9 என்ற கணக்கில் க்ளெபாக்-ரோஜர் இணை போராடி வெற்றி பெற்றது. இதனால், சானியா மிர்சா-போபண்ணா இணை விம்பிள்டன் தொடரில் இருந்து வெளியேறியது.

Advertisement:
SHARE

Related posts

ஸ்டேன் சுவாமியின் மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்

Vandhana

ஆவின் பாலகத்தில் வேறு பொருட்கள் விற்றால் உரிமம் ரத்து: அமைச்சர்

Ezhilarasan

ஆன்லைன் தேர்வு முறையில் மாற்றம்: அண்ணா பல்கலைக்கழகம்!

Halley karthi