அதிமுக ஆட்சியில் கஜானா தூர்வாரப்பட்டுள்ளது: டிடிவி தினகரன்

நீர் நிலைகளைத் தூர்வாருவதாக கூறி அதிமுக ஆட்சியில் கஜானாவே தூர்வாரப்பட்டுள்ளதாகவும் அமமுக கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் மருது சேனை அமைப்பு…

நீர் நிலைகளைத் தூர்வாருவதாக கூறி அதிமுக ஆட்சியில் கஜானாவே தூர்வாரப்பட்டுள்ளதாகவும் அமமுக கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் போட்டியிடும் மருது சேனை அமைப்பு தலைவர் ஆதிநாராயணனுக்கு ஆதரவு தெரிவித்து செக்கானூரணி தேவர் சிலை அருகே அவர் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மக்களிடையே பேசிய டிடிவி தினகரன், “மதுரையில் திடீரென புகழ்பெற்ற சில அற்பர்கள் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பது போல் சுற்றித் திரிவதாக குற்றம் சாட்டினார். மக்களுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்கும் எண்ணம் நிறைவேறாது என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் துரோகம் செய்தவர்களை வேரோடு சாய்க்கவே அமமுக கூட்டணி புறப்பட்டிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். முன்னதாக கிராமங்கள் தோறும் தொழிற்சாலை உருவாக்கி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் வாக்குறுதி அளித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற திருப்பரங்குன்றம் தொகுதியில் அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையை ஆதரித்து டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டு பேசுகையில், “மாதம் 1000 ரூபாய், 1500 ரூபாய் தருவதாக போகாத ஊருக்கு வழி சொல்பவர்களை நம்பி வாக்களிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். நீர் நிலைகளைத் தூர்வாருவதாக கூறி அதிமுக ஆட்சியில் கஜானாவே தூர்வாரப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். தீய சக்திகளையும் தமிழனை துரோகிகளையும் முடிவுக்கு கொண்டுவரும் வகையில் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்றும் பொதுமக்களிடம் டிடிவி தினகரன் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.