50 ஆண்டு காலமாக திமுகவும் அதிமுகவும் மக்களை ஏமாற்றி வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சென்னை விருகம்பாக்கத்தில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், தமிழகம் கடன் சுமையில் தத்தளிப்பதாகவும் இப்படியே சென்றால் தமிழகமே திவாலாகிவிடும் என்றார். விருகம்பாக்கம் தொகுதியில் அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், இல்லத்தரசிகள் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டதாகவும், ஆனால், அதை தங்கள் கணவரிடம் தெரிவிக்காமல் அதை ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறினார்.







