100 நாட்களில் கரூர் சாலைகள் புதுப்பிக்கப்படும்: செந்தில் பாலாஜி

திமுக ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி சாலைகளும் புதுப்பிக்கப்படும் என்று திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார் கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர்…

திமுக ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி சாலைகளும் புதுப்பிக்கப்படும் என்று திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார்

கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் நகராட்சிக்கு உட்பட்ட செல்லாண்டிபாளையம், திருமாநிலையூர், ராயனூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த போது பேசியதாவது, “ திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள வாக்குறுதிகளை விளக்கி கூறினார். திமுக ஆட்சிக்கு வந்த நூறு நாட்களில் கரூர் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்படும். கரூர் தொகுதியின் திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என அவர் உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.