தனது மகன் புற்றுநோயில் இருந்து குணம் அடைய உதவிய திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்கு தந்தை நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.வி. ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யன், தனது தந்தைக்கு ஆதரவாக நிலையூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சுப்ரமணியன் என்ற ஆசிரியர், ராஜன் செல்லப்பாவுக்கு தான் நன்றி தெரிவிக்க விரும்புவதாக கூறினார்.
அப்போது பேசிய ஆசிரியர் சுப்ரமணியன், பத்தாம் வகுப்பு படிக்கும் தனது மகன் நடராஜன் புற்று நோயினால் பாதிக்கப்பட்டதாக கூறினார். தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பெறுவதற்கும் ராஜன் செல்லப்பா உதவி செய்ததாக கூறினார். மேலும் அவர், தனது மகனுக்கு ராஜன் செல்லப்பா செய்த உதவியை வாழ்நாளில் மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.







