மக்கள் நலனிற்காக பாடுபடக் கூடியவர்களையே திமுக, வேட்பாளர்களாக முன் நிறுத்தியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராணிப்பேட்டையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தலின்போது மட்டுமே மக்களை தேடிவருபவன் நான் அல்ல என்றும் எப்போதும் மக்களுக்கு துணையிருப்பேன் என்றும் கூறினார். தமிழகத்தில் காலூன்ற பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது என்றும் கூறிய மு.க.ஸ்டாலின், என்னதான் செய்தாலும், சட்டமன்ற தேர்தலில் பாஜகவால் வெற்றி பெற முடியாது என்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளில் ஒன்றையாவது அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளதா? என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பினார். தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளைக்கூட அதிமுக அரசு தீர்க்கவில்லை என குற்றம் சாட்டிய ஸ்டாலின் திமுக ஆட்சி அமைத்தால் முதல் சட்டசபை கூட்டத் தொடரிலேயே மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிர்ராக தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கோயில்களை பாதுகாக்க 25 ஆயிரம் இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார். வருமான வரி சோதனைகள் மூலம், மத்திய பாஜக அரசு, அதிமுக அமைச்சர்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் ஸ்டாலின் விமர்சித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டியும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.