திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும் என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவர் கருர் நகராட்சிக்கு உட்பட்ட வையாபுரி நகர், பாரதி நகர், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் பேசிய அவர், அந்தந்த பகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், அடுத்து செய்யப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துச் சொல்லி வாக்குகளை சேகரித்தார். பின்னர், திமுகவில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பதவி அடைய முடியும் என்றும் சாதாரண விவசாயிகள் கூட நாடாள முடியும் என்று நிரூபித்த இயக்கம் அதிமுக எனவும் பரப்புரையில் தெரிவித்தார்.







