இலவச திட்டங்கள் அறிவிப்பு ஏமாற்று வேலை:டிடிவி தினகரன்

இலவச திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன்கோயிலில் சாமிதரினசம் செய்த பின் நேற்று…

இலவச திட்டங்கள் அறிவிப்பு என்பது ஏமாற்று வேலை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன்கோயிலில் சாமிதரினசம் செய்த பின் நேற்று செய்தியாளரிகளிடம் பேசிய அவர், “இலவசங்கள் தருகிறேன் என மக்களை ஏமாற்றுவதைவிட அவர்கள் சுயமாக சம்பாதிக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தார். வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறிவித்துள்ளதாகவும் இளைஞர்களுக்கு, பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருவது, வருங்கால தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.


அமமுக தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளதாகவும், மது ஆலைகளையும் படிப்படியாக மூடப்படும் என தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் அறிக்கையில் உள்ள 100 திட்டங்களில் பூரண மதுவிலக்கு முக்கியமான திட்டமாக இருக்கும் என்றும் டி.டிவி தினகரன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.